Friday, December 12, 2025 11:49 am
லியோனல் மெஸ்ஸி தனது “G.O.A.T இந்தியா டூர் 2025” கொண்டாட்டத்திற்காக டிசம்பர் 13 அன்று ஹைதராபாத் மாநிலத்துக்கு செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் டிசம்பர் 13 , 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் கொல்கத்தா , ஹைதராபாத் , மும்பை , டெல்லி ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு அவர் பிரபலங்களைச் சந்திப்பார் என்றும் ஒரு தொண்டு நிகழ்வில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
GOAT சுற்றுப் பயணத்தின் போது மெஸ்ஸி பொதுவில் தோன்றும் நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகள் மாவட்ட செயலியில் விற்பனை செய்யப்படுகின்றன.
பெரும்பாலான நகரங்களில் டிக்கெட் விலை சுமார் 4,500 இந்திய ரூபாவில் இருந்து தொடங்குகிறது.
டிக்கெட் விலையில் மும்பை சுற்றுப்பயணம் மட்டுமே விதிவிலக்கு, அங்கு அதன் விலை 8,250 ரூபாவில் தொடங்குகிறது.
கொல்கத்தாவில் ஆரம்பமாகும் மெஸ்ஸியின் டிசம்பர் 13 ஆம் திகதி ஆரம்பமாகும் GOAT சுற்றுப்பயணமானது டிசம்பர் 15 ஆம் திகதி புது டெல்லியில் நிறைவு பெறும்.
அங்கு மெஸ்ஸி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து அருண் ஜெட்லி மைதானத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்வார்.
இது இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகள் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் , லியோனல் மெஸ்ஸியுடன் ரசிகர்கள் சிறப்பு புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஒரு புகைப்படத்திற்கு இந்திய மதிப்பின் படி ரூ. 10 இலட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
முதன்முறையாக 2011 இல் கொல்கத்தாவில் வெனிசுலாவுக்கு எதிரான நட்பு போட்டிக்காக வருகை தந்த மெஸ்ஸிக்கு ,இது இரண்டாவது இந்திய வருகையாகும்.

