Wednesday, March 11, 2026 3:56 pm
எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சாதாரண தேநீர் 5 ரூபாவாலும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதுடன், ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலைகள் அதிகரிப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்தது. 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவாலும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவாலும் அதிகரித்தது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

