Tuesday, January 6, 2026 11:19 am
மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு, முட்டை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் தொழில்துறையை பராமரிப்பது மிகவும் நெருக்கடியாகி உள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார்.
பச்சை மிளகாய் மற்றும் கறி மிளகாய் ஒரு கிலோவின் விலை 2000 ரூபாயாகவும், பீன்ஸ் ஒரு கிலோவின் விலை 1000 ரூபாயாகவும் காணப்படுகின்றது. இவ்வாறாக இருந்தபோதிலும் உணவு மற்றும் பானங்களின் விலையை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டிய அவர், மின்சார கட்டணம் அதிகரித்தால் உணவுகளின் விலை அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

