Wednesday, March 18, 2026 4:25 pm
முறையான அனுமதியைப் பெறாமல் ட்ரோன்களை பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வானூர்திப் படை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் அனுமதியின்றி ட்ரோன்களை இயக்கிய நபர்களுக்கு எதிராக இதற்கு முன்பும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வானூர்திப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கவும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

