தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மஹா ஓயாவின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், குறித்த ஆற்றின் கரையோரங்களில் அமைந்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (21) நண்பகல் 12 மணி வரை செல்லுபடியாகும் வகையில், நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு மற்றும் தங்கொடுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் வெள்ள நிலைமைகள் குறித்து மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பகுதிகளில் வசிப்போர் அவசர நிலைமைகளின் போது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்குமாறும், வாகன சாரதிகள் கவனமாகச் செயற்படுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.