‘கணேமுல்ல சஞ்சீவ’ என அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலையின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் இன்று செவ்வாய்கிழமை நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இஷாரா செவ்வந்தி பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாரால் பல மாதங்களாக தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நேபாள பொலிஸார் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.