Thursday, February 19, 2026 10:33 am
அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதியைத் தகாத வார்த்தைகளால் திட்டி அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய கடான பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கடான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கதிர்காமம் புனித யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் ஆசனப்பட்டிகள் இல்லாததனால் அதிவேக வீதிக்குள் நுழைய பொலிஸார் அனுமதி வழங்காத காரணத்தால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டு அந்தப் பேருந்தில் பயணித்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பெயரைக் கூறி பேருந்தில் வந்தவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதுடன், அந்தச் சந்தர்ப்பத்தைக் கைபேசியில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

