Wednesday, October 29, 2025 11:24 am
நுரைச்சோலை பகுதியில் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை பருகியதாக கூறப்படும் இரு கடற்றொழிலாளர்கள் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், உயிரிழந்தவர்கள் 28 வயதுடையர்கள் என காவல்துறையினர் தெரிவித்ததோடு, இருவரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அறிய முடிகின்றது.
நுரைச்சோலை பகுதியில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நான்கு கடற்றொழிலாளர்கள், கடலில் மிதந்து வந்த மர்மமான திரவம் நிரப்பப்பட்ட போத்தல் ஒன்றைக் கண்டெடுத்து அதனை அருந்தியுள்ளனர். திரவத்தைக் பருகியதை தொடர்ந்து, அவர்கள் கடும் சுகயீனமடைந்ததாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், அவர்கள் குடித்த திரவம் என்ன? அது எங்கிருந்து வந்தது? என்பது குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளது.

