Monday, March 30, 2026 4:43 pm
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்து கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பகுதியில் இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபன் முன்னிலையில் இன்றைய அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

றாஸீ முஹம்மத் உள்ளிட்ட சட்டத்தரணி குழுவினர், காணாமலாக்கப்பட்டோர் அலுவலக அதிகரிகள், பொலிசார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பிரிவு, தொல்லியல் திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்ட பலர் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
மேலும் குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் இதன்போது கலந்து கொண்டனர்.

இன்று நண்பகல் 12 மணிவரை அப்பகுயில் எதுவித தடையப் பொருட்கள் மீட்கப்பட்டிருக்கவில்லை. இந்த பணி இன்றிலிருந்து எதிர்வருகின்ற ஐந்து நாட்கள் அல்லது ஏழு நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

