Monday, January 19, 2026 1:45 pm
சிலியின் தெற்கில் உள்ள இரண்டு பிராந்தியங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பேரழிவு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதி கேப்ரியல் போரிக்கினால் இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் குறைந்தது 20,000 பேரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுடன், குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று காலை வரையான நிலவரப்படி நாடு முழுவதும் பதிவான 24 தீ விபத்துகளை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக சிலியின் CONAF வனவியல் நிறுவனத்தின தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவற்றில் மிகப்பெரியது Ñuble மற்றும் Bío Bío பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தானது. அங்கு அரசாங்கம் அவசரநிலையை அறிவித்தது.

இரண்டு பிராந்தியங்களிலும் இதுவரை கிட்டத்தட்ட 8,500 ஹெக்டேர் (21,000 ஏக்கர்) தீ விபத்துக்களை சந்தித்துள்ளன.
சிலியின் செனாப்ரெட் பேரிடர் நிறுவனம் குறித்த பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 20,000 பேர் வெளியேற்றப்பட்டதாகவும், குறைந்தது 250 வீடுகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

