Friday, January 9, 2026 12:55 pm
பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள கொட்டகலை ஆகீல் தனியார் தோட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தீப் பரவல் காரணமாக ஒரு குடியிருப்பு முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளதோடு, மேலும் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இச் சம்பவம் குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்த போதிலும் ஒரு வீடு முழுமையாக எரிந்துள்ளது.
மேலும் இச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நிர்கதிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.


