Friday, November 21, 2025 11:03 am
பிரேசிலின் பெலெமில் உள்ள COP30 என்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சிமாநாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றியிருந்த போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் எவ்வாறு முன்னேற்றம் அடைவது என்பது குறித்து சுமார் 200 நாடுகள் இந்தக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன. உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகள் குழு உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் ஐ.நா.வின் காலநிலை பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டிருந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் இந்த அனர்த்தத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும் மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

