Wednesday, April 8, 2026 4:34 pm
பசறை மிதும்பிட்டிய கலபொட தோட்டப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வீட்டின் முன்புறத்தில் அமைந்திருந்த சமையல் அறையில் தீ பரவியுள்ளது. அப்பகுதி மக்களின் துரிதமான செயல்பட்டினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தினால் சமையல் அறையில் இருந்த அனைத்து உபகரணங்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளன.

இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

