Monday, March 16, 2026 3:05 pm
ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஐசியூ பிரிவில் இன்று திங்கட்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அந்தப் பிரிவில் மருத்துவ சிகிச்சையில் இருந்த நோயாளிகள் 10 பேர் உயிரிழந்தனர்.
5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பத்திரமாக மீட்கப்பட்ட நோயாளிகள் சிலர், அந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய மருத்துவ கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநில முதல்வர் மோகன் மாஜி தீ விபத்தில் இருந்து தப்பிய நோயாளிகளிடம் நலம் விசாரித்துள்ளதுடன் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

