Thursday, October 23, 2025 8:01 pm
இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி வீதம் முன்னேற்றகரமாக இருப்பதாக, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்குள் பணவீக்கம், நிதித் தன்மை ஆகியவை பலமடைந்துவிடும் என நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பணவீக்க மற்றும் நிதியியல் ஸ்திரத்தன்மை சார்ந்த இலக்குகள் அடுத்த வருடத்துக்குள் அடையப்படும் எனவும், சமகாலத்தில் பதிவாகியுள்ள மற்றும் எதிர்வுகூறப்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி வீதம், ஆரோக்கியமான மட்டத்தில் காணப்படுவதாகவும் அவர் எடுத்துச் சொன்னார்.
இலங்கையின் நிதியியல் முறைமை மீளாய்வு தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. அங்கு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்த ஆளுர் நந்தலால் வீரசிங்க, தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பாக பிரதான எதிர்கட்சிகள் வெளியிடும் புள்ளிவிபரங்கள் உண்மைக்கு மாறானவை எனவும் குறிப்பிட்டார்.
2022, 2023 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது நிதி நிலைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றியுள்ளது என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார். மத்திய வங்கியின் மதிப்பிட்டின் பிரகாரம், 2026 ஆண்டு பணவீக்கத்தை 5 சதவீத மட்டத்துக்குக் கொண்டுவரமுடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்த ஆண்டு வாகன இறக்குமதிக்காக வாகன இறக்குமதியாளர்கள் 1.5 பில்லியன் டொலர்களை செலவிடுவிட்டுள்ளனர். இது மிக உயர்வான முன்னேற்றம் என்று ஆளுநர் நந்தலால் வீரசிங்க, எடுத்துக் கூறினார்.
இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி தொடர்ச்சியாக 5 சதவீதத்தை எடடியுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னரான சூழலில் இது ஆரோக்கியமன நிதி நிலைமை என்று கூறினார்.
சர்வதேச கடன்களை செலுத்த கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் படிப்படியாக அடுத்த சில ஆண்டுகளுக்குள் கடன்களை மீள செலுத்த முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்ட ஆளுர் நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள் சிலவற்றை மாற்றியுள்ளதாகவும் கூறினார்.
ஆனால் இலங்கையின் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிடவும் 2026 ஆம் ஆண்டு குறைவடையக் கூடிய வாய்ப்புகள் இல்லை எனவும், வகன இறக்குமதிக்கு அனுமதித்தமையினால் பெருமளவு டொலரகள் வெளியே செல்வதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.