Tuesday, February 3, 2026 11:17 am
தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கையின் பிரபல நடிகர் ஹேமல் ரணசிங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் 2026 ஜனவரி 8 ஆம் திகதி நடந்தது. முறைப்பாடு தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு ரணசிங்கவுக்கு பலமுறை அறிவிக்கப்பட்டதாகவும், அவர் அவ்வாறு செய்யத் தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில் ரணசிங்க இன்று காலை வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

