Wednesday, January 14, 2026 4:29 pm
சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் மூவர் நெடுந்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 237 விலை உயர்ந்த புறாக்கள் இந்தியாவில் இருந்து இரகசியமான முறையில் பிளாஸ்ரிக் கொள்கலன்களுக்குள் மறைத்து கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த புறாக்களை சட்டவிரோதமாக கடத்தி வந்த சந்தேகத்தின் பேரில் மூவர் நெடுந்தீவு கடற்படை மற்றும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


