Friday, March 6, 2026 4:35 pm
ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான FBI ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது.
ஸ்கை நியூஸ் என்.பி.சி நியூஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்கள், இந்த ஆவணங்கள் விடுபட்டிருப்பதாக செய்தி வெளியிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட சில விடுபட்ட கோப்புகள், தரவுப்பட்டியலில் (Spreadsheet) “நகல்” (Duplicative) எனத் தவறாகக் பெயரிடப்பட்டிருந்ததால் அவை பொதுமக்களின் பார்வைக்குக் கிடைக்கவில்லை என்றும், தற்போது அந்தத் தவறு சரி செய்யப்பட்டுள்ளதாகவும் நீதித்துறை தெரிவித்துள்ளது.
தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டிய ஒரு பெண்ணிடம் FBI நடத்திய மூன்று தனித்தனி நேர்காணல்களின் சுருக்கங்கள் மற்றும் குறிப்புகள் இதில் அடங்கும்.

