Thursday, February 19, 2026 2:11 pm
சென் தோமஸ் கல்லூரியின் ஆங்கில பாட ஆசிரியரும் பல்கலை ஆற்றல்மிக்க படைப்பாளியுமான சண்முகவேல் பிரஷாந்தி நேற்று பண்டாரவளையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஆசிரியர் சண்முகவேல் பிரஷாந்தி கலை, இலக்கிய ஆர்வமிக்க ஒருவர் . சிறந்த குரல் வளமிக்க பாடகியும், அனைத்து இசைகருவிகளையும் இசைக்கும் திறமையான இசை ஞானம் கொண்டவர் .
இந்திய முன்னணி இசையமைப்பாளர்கள் கங்கை அமரன், தீனா ஆகியோரது பாராட்டையும் இவர் பெற்றவர்.

கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் நாட்டையும் மக்களையும் மீளெழுச்சி பெரும் நோக்கில் தனது தனிப்பட்ட முயற்சியில் உருவாக்கிய “Rebuild Sri Lanka” எனும் ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மும்மொழி பாடலை தானே பாடி இசையமைத்து வெளியிட்டார்.
தீராத இசை ஆர்வமிக்க படைப்பாளியாகவும் ஆங்கில ஆசிரியராகவும் திகழ்ந்த சண்முகவேல் பிரஷாந்தினியின் இழப்பு மலையக கல்வி சமூகத்திற்கும் கலை உலகிற்கும் பெரும் பேரிழப்பாகும்

