Friday, January 30, 2026 11:31 am
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடர் பல்லேகல மைதானத்தில் இன்று ஆரம்பமாகிறது.
இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் இலங்கை அணி பங்குபற்றும் கடைசி T20 தொடர் இதுவாகும்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இதுவரை 14 T20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 10 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளதுடன், இலங்கை 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

