Thursday, December 4, 2025 4:27 pm
மழை வெள்ளம் போன்ற சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு சேதம் ஏற்பட்டது. இவ்வாறு தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள விவசாயிகளின் பயிர் சேதங்கள் குறித்து அறிவிப்பதற்கு விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை பல வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
விவசாயிகள், பயிர் சேதம் குறித்துத் தகவல் தெரிவிக்க 1918 என்ற விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபையின் தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
அதற்கமைய, குறித்த பயிர்களுக்கான நட்டஈட்டை வழங்கும் எதிர்பார்ப்புடன் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தற்போது பயிர் சேதங்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க ஆரம்பித்துள்ளது.
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த தொலைபேசி இணைப்புகளில் 20 மாவட்டங்களில் சுமார் 75% ஆனவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

