Saturday, November 8, 2025 11:13 pm
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் மருத்துவர்கள் பற்றாக்குறையை நீக்குங்கள்! குடிசார் அமைப்புகள் கோரிக்கை விடுப்பு..
முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் தற்போது நிலவி வரும் மருத் துவர்கள் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு, முல்லைத்தீவு மாவட்ட குடிசார் அமைப்புகளின் பிரதி நிதிகளால் பிராந்திய சுகாதார சேவை கள் திணைக்கள பணிப்பாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற மாகாண மட்ட ஊராட்சி முற்றக் கலந்து ரையாடலின் போதே அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
இது தொடர்பாக கருத்துத் தெரி வித்த குடிசார் அமைப்புகளினுடைய பிரதி நிதிகள், வடக்கே விசுவமடு முதல் தெற்கே வெலிஓயா வரையிலும் அத்துடன் கிழக்கே முல்லைத்தீவு முதல் மேற்கே துணுக்காய் வரையான பெரிய ஒரு நிலப்பரப்பைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி வரும் முல்லைத் தீவு மாவட்ட வைத்தியசாலை பாரிய வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வரு கின்றது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசா லையில் சட்ட வைத்திய அதிகாரி இல்லை.அத்துடன் மகப்பேற்று மருத் துவ நிபுணர் ஒருவர் மாத்திரமே 24 மணி நேரமும் கடமையாற்றுகின்றார். அதேநேரம் குழந்தை நல மருத்துவ நிபுணர் ஒருவர் மட்டுமே பொறுப்பில் இருக்கின்றார்.
அவருக்கும் தற்போது இடமாற்றம் கிடைத்துள்ளது. இவ்வாறான ஒரு நிலைமை யில் முல்லைத்தீவு மக்கள் பெரும் சிர மங்களை எதிர்நோக்குகின்றனர்.
குறிப்பாக விபத்தில் சிக்கி ஒருவர் இறந்த பின்னர் அவருடைய உடலை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி மருத்துவ அறிக்கை பெற்ற பின்னரே உடலை உறவினர்களுடன் வழங்கும் நடைமுறை காணப்படு கின்றது. இதனால் உறவினர்கள் பெரும் சிரமங்களுக்கும் மன உளைச்சல்க ளுக்கும் ஆளாகின்றனர்.
அதனை விட 24 மணி நேரமும் ஒரே வைத்தியர் கடமையாற்றுவதால் அவர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியான தாக்கங்கள் நிச்சயமாக ஏற் படும். எனவே, வைத்தியசாலையின் வெற்றிடங்களுக்கு ஏற்ப பொருத்தமான மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆழிப்பேரலை மற்றும் போர் போன்ற அனத்தங்களால் மிகவும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு உரிய மருத்துவ வசதி களை ஏற்படுத்தி அவர்களுடைய இன்னல்களைத் தீர்த்துத் தாருங்கள் என்றனர்.

