Friday, October 31, 2025 11:59 am
யாழ்ப்பாண பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 3 நாளில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
160 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள், போதை மாத்திரை, ஹெரோயின், மாவா என்பனவற்றை உடமையில் வைத்திருந்த ஆறு சந்தேக நபர்கள் என மொத்தமாக எட்டு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் பாவனை, அதனால் ஏற்படும் வன்முறைகள் என்பன நாட்டில் தற்போது அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருளை ஒழிக்கும் செயற்திட்டமான “முழு நாடும் ஒன்றாக” என்னும் தேசிய செயற்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க தலைமையில், நேற்று ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


