Wednesday, January 7, 2026 3:01 pm
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சாரா ஜஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் உயிரோடு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் கேள்விக்கு பதலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சாரா ஜஸ்மின் மரணமடைந்து விட்டதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை.
அவர் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றதாகவும், சில தகவல்களை வெளிப்படுத்த முடியாது. அவை மேலதிக விசாரணைகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தலாம் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

