Saturday, November 1, 2025 10:47 am
இந்தியப் பெருங்கடலில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று சனிக்கிழமை அதிகாலை பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மக்கள் வாழ்வதில்லை. இதனால் உயிரிழப்புகள் பொருட் சேதங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தரவுகளின் பிரகரம், மக்கள் வாழாத பிராந்தியத்தில் நிலகடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலின் டெக்டோனிக் தட்டு (Tectonic Plate) எல்லைகளுக்கு அருகில் அவ்வப்போது ஏற்படுவது வழமை. அந்த அடிப்படையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

