பாகிஸ்தான் நாட்டில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேசிய நிலநடுக்கவியல் நிலையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் பாகிஸ்தான் நேரப்படி காலை 11 மணிக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் பாரிய தேசங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அரச ஊடகங்கள் கூறுகின்றன.
நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதால், குறித்த பிரதேசத்தில் நில அதிர்வுகள் தொடர்ச்சியாக ஏற்படும் என பாகிஸ்தான் தேசிய நிலநடுக்கவியல் நிலையம் எச்சரித்துள்ளது.
இந்தியாவின் நிலத்தட்டின் வடமேற்கு விளிம்பில் அமைந்துள்ள பஞ்சாப் பிரதேசத்திலும் நில அதிர்வுக்கு உட்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக, பலூசிஸ்தான் 1945 ஆம் ஆண்டில் 8.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
அதேநேரம், சனி – ஞாயிற்றுக்கிழமைகளில் பாகிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தன. பாகிஸ்தான் உலகின் நிலநடுக்கம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாகும்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் மற்றும் கைபர் பக்துன்க்வா, கில்ஜித்-பால்டிஸ்தான் போன்ற மாகாணங்கள் யூரேசிய தட்டின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளன. இதனால் நிலநடுக்கத்துக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதாக ஏலவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.