Monday, January 5, 2026 1:32 pm
இந்தியாவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திரிபுரா மற்றும் அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.
திரிபுராவின் கோமதி பகுதியில் இன்று அதிகாலை 3.33 மணியளவில் 3.9 மெக்னிடியூட் அளவிலும், அசாமில் உள்ள மோரிகான் பகுதியில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் 5.1 மெக்னிடியூட் அளவிலும் நில அதிர்வு ஏற்பட்டது.
நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

