Wednesday, April 1, 2026 4:15 pm
தென்மேல் கடற்கரைக்கு அருகாமையில் நேற்று கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி இழுவை படகில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த படகு மேலதிக சோதனைக்காக இன்று புதன்கிழமை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதன்போது நடத்தப்பட்ட சோதனையில் 300 கிலோகிராம் எடையுள்ள 298 ஹெரோயின் பொதிகள் படகில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் சேர்த்து ஆறு சந்தேகநபர்களும் பல நாள் மீன்பிடி இழுவை படகும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

