Friday, March 6, 2026 2:42 pm
யாழில், கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டுசெல்லப்பட்ட சுமார் 500 லீட்டர் மண்ணெண்ணெய் மற்றும் அதனை கொண்டுசென்ற வாகனம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வாகனத்தை செலுத்திய சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையிலான குழுவினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட வாகனம் மற்றும் எரிபொருள் என்பவற்றுடன் வாகன சாரதியை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

