Monday, January 5, 2026 12:02 pm
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் இலங்கை போக்குவரத்து சபை சாரதியொருவர் நேற்று மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
777 இலக்க பேருந்தை செலுத்திய சாரதி பயணிகளுடன் அதிவேகத்தில் பயணித்தமைக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து சாரதியை சோதனையிட்ட போது அவர் அனுமதிப்பத்திரம் இல்லாமல் பேருந்தைச் செலுத்தியதோடு, மது போதையில் வாகனம் செலுத்தியதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

