Friday, January 9, 2026 11:57 am
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (09) உத்தரவு பிறப்பித்துள்ளது.
2001ம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்டது.
கடந்த 26ம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

