Friday, October 17, 2025 5:14 am
ஜனநாயகன் விஜயின் 69 வது படம் எனவும் அவரது கடைசி படம் என்றும் கூறப்படுகின்றது. காரணம் அவரது அரசியல் வருகை ஆகும்.
பொலீஸ் கேரக்டரில் (Character) வரும் அதன் பின்னர் அரசியல்வாதி, முதல்வராவது தான் கதை என்று கூறப்படுகின்றது. 2026 ஜனவரி 9-ம் திகதி பொங்கல் பண்டிகைக்கு முன் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு இருக்கின்றார்கள்.
விஜய் அரசியலுக்குள் நுழைந்திருப்பதாலும், ஜனநாயகன் என பெயரிட்டு இருப்பதாலும் இப்படத்தின் கதை என்ன என்பது பலத்த எதிர்பார்ப்புகளை கிளப்பி இருக்கின்றது.
இந் நிலையில், 1997ம் ஆண்டு மலையாள சூப்பர் ஸ்டார் சுரேஷ் கோபி நடித்த ஜனாதிபதியம் கதை தான் விஜய் நடிக்கும் ஜனநாயகன் என்கின்றார்கள்.
ஜனாதிபதியம் ஒரு அரசியல் சட்டையர் பாணியில் உருவாக்கப்பட்டது. மலையாள நடிகர் சுரேஷ் கோபி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கதை, ஒரு சாதாரண மனிதனை மையமாக வைத்து, அவன் எப்படி அரசியல், சமூக அநீதிகளுக்கு எதிராக போராடுகின்றான் என்பதைப் பற்றியது.
இந்தப் படம், அரசியல் ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகம், சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்தது.
சுரேஷ் கோபி ஒரு நேர்மையான, தைரியமான காவல்துறை அதிகாரியாக வாழ்ந்து, மக்களுக்காக போராடும் ஒரு தலைவனாக உருவெடுப்பார். மக்களின் ஆதரவுடன் ஒரு மாற்றத்தை உருவாக்க முயன்று முதல்வர் பதவியை அடைவது தான் கதை.

