Monday, February 9, 2026 12:27 pm
கிவுல் ஓயா திட்டம் தொடர்பாக இன்று வெலிஓயாவில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும், எதிர்த் தரப்பு எம்.பிக்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலின்போது கொழும்பில் இருந்து வருகை தரவுள்ள மகாவலி அதிகார சபையின் அதிகாரிகள் குழுவொன்று கிவுல் ஓயா திட்டம் சம்பந்தமாக விளக்கக் காட்சிகள் அடங்கிய தெளிவுபடுத்தல்களை முன்னெடுக்கவுள்ளது.
கடந்த 2ஆம் திகதி கிவுல் ஓயா திட்டத்தினை எதிர்த்து தமிழ் அரசியல் கட்சிகளாவுலும், பொதுமக்களாலும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

