Wednesday, December 10, 2025 11:44 am
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான குழு இன்று புதன்கிழமை (10) இரண்டாவது நாளாகவும் கூடவுள்ளது.
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வழங்கப்படும் வெளிநாட்டு உதவிகள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் குழுவை நியமித்தார்.
இந்த அனர்த்த முகாமைத்துவக் குழுவில் , பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தலைமையிலான 08 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இதேவேளை, உதவி விநியோகத் திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் தூதரகங்களுக்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

