Wednesday, December 3, 2025 12:59 pm
நேற்று செவ்வாய்க்கிழமை (02) ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற நான்காவது இன்டர்நெஷனல் லீக் ரி20 ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பியன் துபாய் கெப்பிட்டல்ஸ் அணியை 4 விக்கெட்களால் டெசர்ட் வைப்பர்ஸ் அணி வெற்றி கொண்டது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தசுன் ஷானக்க தலைமையிலான துபாய் கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இதில் ரோவ்மன் பவல் 39 ஓட்டங்களையும் , மொஹம்மத் நபி 29 ஓட்டங்களையும், ஷயன் ஜஹாங்கிர் 19 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.
பந்துவீச்சில் நூர் அஹ்மத் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், டேவிட் பெய்ன் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், குஸெய்மா தன்வீர் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
சாம் கரன் தலைமையிலான டெசர்ட் வைப்பர்ஸ் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அண்ட்றீஸ் கௌஸ் 58 ஓட்டங்களையும், பக்கார் ஸமான் 26 ஓட்டங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவரும் 28 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக் கொடுத்தனர்.
மெக்ஸ் ஹோல்டென் 16 ஓட்டங்களைப் பெற்றார்.
டேன் லோரன்ஸ் 19 ஓட்டங்களுடனும் குஸெய்மா தன்வீர் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் வக்கார் சலாம்கீல் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், ஸ்கொட் கியூரி 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

