Thursday, December 18, 2025 1:44 pm
அதிக மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிப்பதால் எட்டு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
டெங்கு என்பது ஈடிஸ் கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் காய்ச்சல் ஆகும்.
பொதுமக்கள் சுகாதாரமற்ற முறையில் செயற்படுகின்றமையாலேயே டெங்கு நோய் அதிகரிக்கின்றது என சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க , கம்பஹா , கண்டி , காலி , கொழும்பு , களுத்துறை , மாத்தறை , இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் டெங்கு நுளம்புகளின் அபாயம் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி டெங்குவை உருவாக்கும் நுளம்பு குடம்பிகளின் பரவல் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் , சில மாவட்டங்களில் , நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை சுத்தம் செய்யுமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் , இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் போது , சுமார் 25-30 சதவீதம் பேர் இதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவித்தார்.
டெங்கு நோயை கட்டுப்படுத்த மக்களிடையே ஆர்வம் இல்லாத காரணத்தினால் , ஜனவரி மாதம் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெங்குவை இல்லாதொழிக்க, அறிவியல் பூர்வமான தடுப்பு முறைகளையும், சமூக உணர்வையும் ஒருங்கிணைத்து, அரசாங்கம், சமூகம், மற்றும் தனிநபர்கள் அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே வெற்றியை அடைய முடியும்.

