Wednesday, October 22, 2025 5:49 am
பாலஸ்தீனம் தனி அரசாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கோரி, கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் ஒன்றுகூடிய பெண் செயற்பாட்டாளர்கள், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்ளையும், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களையும் புரியும் இஸ்ரேல் அரசு தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கோசம் எழுப்பினர்.
பாலஸ்தீன தூதரகத்துக்கு முன்பாக ஆரம்பித்த பேரணி கொழும்பு -07 இல் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் வரை வந்தது. பின்னர் அங்கு மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அழிந்து கொண்டிருக்கும் காசா பிரசேத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இன அழிப்புக் குற்றத்துக்கு எதிராக இஸ்ரேல் அரசு மீது தகுந்த நடவடிககை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்ககளை மையமாக் கொண்டு இயங்கிவரும் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் பிரதிநிதிகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.
அமெரிக்கா தலைமையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டாலும், தொடர்ந்தும் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாகவும் பெண்கள் அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன. அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டுளள காசா மக்களின் அடிப்டைத் தேவைகள் உடனடியாக முழுமைப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
கர்ப்பிணிப் பெண்கள் காசாவில் பெரும் இன்னல்களை எதிர்கொள்வதாகவும் உடனடி உதவிகள் – நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்றும் பேரணியின்போது கோசம் எழுப்பினர்.