Wednesday, March 25, 2026 2:47 pm
மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை தேயிலைகளுக்கான கேள்வி கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற நிலைமைகள் காரணமாக அந்த நாட்டு மக்கள் உணவுப் பொருட்களைக் கையிருப்பில் வைக்க முற்பட்டுள்ளதால் தேயிலைக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் ராஜ் ஒபேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த வார ஏலத்தில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி விற்பனை விலை ரூ. 1153 ஆகக் காணப்பட்டது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை மற்றும் மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக குவைத், சவூதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள போதும் துருக்கி மற்றும் ஈராக் போன்ற நாடுகளுக்கு மாற்று கப்பல் பாதைகள் ஊடாக ஏற்றுமதிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும், தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்தியைத் தடையின்றி முன்னெடுப்பதற்குத் தேவையான எரிபொருளைத் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய விசேட சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

