Monday, January 5, 2026 4:19 pm
வெனிசுவெலாவின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெனிசுவெலா நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் வெனிசுவெலா ஜனாதிபதி மதுரோவும், அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.
இந்நிலையில், வெனிசுவெலா நாட்டின் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
“நிர்வாக தொடர்ச்சியையும் தேசத்தின் விரிவான பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, வெனிசுவெலா பொலிவேரியன் குடியரசின் ஜனாதிபதி பதவியை ரோட்ரிக்ஸ் ஏற்றுக்கொள்வார்” என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர், வெனிசுலாவின் எண்ணெய் துறை, பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளை டெல்சி ரோட்ரிக்ஸ் மேற்பார்வை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

