மெட்டா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பதிப்பிற்கான புதிய குரலாக ஹாலிவுட்(Hollywood) நடிகை தீபிகா படுகோனின் குரல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியை பகிர்ந்து கொண்ட தீபிகா படுகோன் “ஹாய் நான் தீபிகா படுகோன், நான் மெட்டா AI-இன் புதிய குரல் ரிங்கை தட்டுங்கள் எனது குரல் வரும்” என பதிவிட்டுள்ளார்.
மெட்டா AI-க்குக் குரல் கொடுத்த முதல் இந்தியப் பிரபலம் தீபிகா படுகோன் என்பது குறிப்பிடத்தக்கது.