Friday, December 5, 2025 10:21 am
நாட்டில் நிலவிய அதிதீவிர அனர்த்த நிலமை காரணமாக 481 பேர் உயிரிழந்துள்ளதுடன், 345 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
அனர்த்தத்தினால் இதுவரையில் சுமார் 509,680 குடும்பங்களைச் சேர்ந்த 1814,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் 118 பேர் பலியாகியுள்ளனர். நுவரெலியாவில் 89 பேரும், பதுளையில் 83 பேரும், குருணாகல்லில் 56 பேரும், புத்தளத்தில் 29 மற்றும் மாத்தளை 28 பேரும் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் 1,967 வீடுகள் முழுமையாகவும் 50,173 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

