Friday, December 26, 2025 2:44 pm
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு கடந்த 24ம் திகதி 119 அழைப்பின் மூலம் , இரண்டு தொலைபேசி எண்களில் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொலை மிரட்டலை வலிகாமம் பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வர் உட்பட பலர் சேர்ந்தே விடுத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மல்லாக கட்சி அலுவலகத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அடையாளம் தெரியாத இரண்டு நபர்களிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் , வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களையும் அளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


