Saturday, December 13, 2025 3:31 pm
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கும் மரண சான்றிதழை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தெரிவித்தார்.
மேலும் , இந்த விடயம் தொடர்பில் சுற்றறிக்கையொன்றும் வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி ,காணாமல் போன வெளிநாட்டவர்கள் தொடர்பில் அவர்களுடைய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர் அலுவலகம் மற்றும் தூதுவர்கள் ஊடாக , பதிவாளர் நாயகத்துக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி காலி , மாத்தறை , அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய 22 மாவட்டங்களிலும் தங்கி இருந்த வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு இந்த நடைமுறை நடைமுறைப்படுத்தப்படும் என பதிவாளர் நாயக திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

