Wednesday, January 14, 2026 10:57 am
பருத்தித்துறை துறைமுக பகுதியில் முறிந்து விழும் அபாய நிலையில் காணப்பட்ட மின்கம்பம் அகற்றப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போலின் தலையீட்டில் இலங்கை மின்சார சபையினரால் உடனடி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பருத்தித்துறை துறைமுக பகுதிக்கு அதிகளவானோர் வந்து செல்லும் நிலையில் இந்த இடம் பொழுதுபோக்கிடமாகவும் காணப்படுகின்றது. கடற்கரை வீதியூடாக அதிகளவான மக்கள் பயணித்து வரும் நிலையில் எந்த நேரமும் முறிந்து விழும் அபாய நிலையில் மின்கம்பம் சிதைவுக்குள்ளாகி காணப்பட்டு வந்தது.
இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை மின்சார சபைக்கு தெரியப்படுத்தி அதனை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பருத்தித்துறை நகரபிதாவினால் தெரியப்படுத்தப்பட்டது.
இதையடுத்து நேற்று செவ்வாயக்கிழமை இலங்கை மின்சார சபையின் ஊழியர்களினால் மேற்படி மின்கம்பம் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டுள்ளது.

