Monday, November 10, 2025 8:52 pm
மாத்தறை மாவட்டம் திக்வெல்ல கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த செக் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் மீட்கப்பட்டு திவெல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோதே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சுற்றுலாப் பயணி நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வந்து திக்வெல்லவில் உள்ள, சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

