Friday, December 5, 2025 2:21 pm
இலங்கையில் பதிவான காலநிலை வரலாற்றில், மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்திய ஒரு காலநிலை சார் அனர்த்தமாக டித்வா புயல் பதிவாகியுள்ளது.
2004 ஏற்பட்ட சுனாமியை விடவும் 6 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பொருளாதார சேதத்தை ஏற்படுத்தி, நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மீட்பு பணிக்கு கூட சிரமங்களை ஏற்படுத்திய ஒரு பேரழிவாக இது பதிவாகியுள்ளது.
இது குறித்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவிக்கையில், சுனாமியால் ஏற்பட்ட சேதத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் இது ஒரு அண்ணளவான மதிப்பீடு மட்டுமே என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பொருளாதார மீட்புத் திட்டத்தை உருவாக்க பேரிடருக்குப் பிந்தைய முறையான மதிப்பீடு பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2004 சுனாமியின் பொருளாதார சேதம் 1.5 முதல் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு மெல்ல மீண்டு வந்து கொண்டிருந்த இலங்கைக்கு, இந்த டித்வா புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவித்திருக்கிறது.

