Wednesday, March 11, 2026 10:07 am
உலகச் சந்தையில் அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்கில் ஏற்பட்ட போரினால், கடந்த திங்கட்கிழமை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்து 119 டொலர்கள் வரை பதிவாகியிருந்தது.
“போர் மிக விரைவில் முடிவுக்கு வரும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 90 டொலர்கள் வரை சரிவடைந்தது.
இன்று காலை நிலவரப்படி, அமெரிக்க கச்சா எண்ணெய் (WTI) ஒரு பீப்பாய் சுமார் 83.35 டொலர்கள். பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் சுமார் 87.88 டொலர்கள் வரை பதிவாகியிருந்தது.

