Wednesday, November 12, 2025 11:13 am
உலக கால்பந்து தொடரின் ஒரு முக்கிய வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்கின்றார். போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரராகவும், உலக கால்பந்து ஜாம்பவானுமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ காணப்படுகின்றார்.
இந்த நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ‘TOURISE Summit’ மாநாட்டில் பேசிய ரொனால்டோ, இன்னும் ஓரிரு ஆண்டுகளில் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டில் கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ணம் பற்றி கேட்கப்பட்ட போது, ரொனால்டோ “நிச்சயமாக ஆம். எனக்கு அப்போது 41 வயதாக இருக்கும் அதுவே பெரிய போட்டிகளில் பங்கேற்கும் சரியான தருணம் என்று நினைக்கிறேன்” என்று உறுதிப்படுத்தினார்.
போர்த்துகல் அணி இதுவரை அடுத்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறவில்லை. ஆனாலும் வியாழக்கிழமை அயர்லாந்துக்கு எதிராக வென்றால் 2026ம் ஆண்டிற்கான உலக கிண்ணத் தொடரிற்கு தகுதி பெறும். அவ்வாறு தகுதி பெறும் பட்சத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரே கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசிப் போட்டியாக இருக்கும்.
சர்வதேச அளவில் சொந்த அணிக்காக அதிக கோல்கள் (143) அடித்த வீரர் என்ற சாதனையை அவர் தன்வசம் வைத்துள்ளார். அதேபோன்று 2016 ஆம் ஆண்டு யூரோ கிண்ணத்தை போர்த்துக்கலுக்கு வென்று கொடுத்துள்ளார்.

