Friday, February 20, 2026 12:09 pm
நுவரெலியா பிரதான நகரில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களில் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து சமையல் எரிவாயுவை பெற்றுச் செல்கின்றனர்.
எதிர்வரும் நாட்களில் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் என பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைந்து சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய நீண்ட நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
நுவரெலியாவில் பிரதான இடங்களில் வழமையைவிடக் குறைவான அளவு சிலிண்டர்களே விநியோகிக்கப்படுவதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள் இன்னும் சில இடங்களில் விநியோகம் தாமதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பகுதிகளில் அறவே விநியோகிக்கப்படாமல், முடங்கியுள்ளதாகத் தெரியவருகிறது இரண்டு வகை சமையல் எரிவாயுகளில் ஒன்றை கூட கொள்வனவு செய்ய முடியாது நுகர்வோரும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆனாலும் எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை இல்லை என அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

