Thursday, November 20, 2025 3:02 pm
திருகோணமலை – தம்பலகாமம் பாலம்போட்டாறு, பிரதான வீதி அருகில் இன்று வியாழக்கிழமை காலை பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த நடத்துநர் உயிரிழந்துள்ளார்.
பாலம்போட்டாறு, கண்டி – திருகோணமலை வீதியில் உள்ள கோயில் ஒன்றில் உள்ள உண்டியலில் காணிக்கை போட்டு விட்டு ஓடிச் சென்று பஸ்ஸில் ஏறிய போது தவறி விழுந்ததில் தலை அடிபட்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.
திருகோணமலை – கந்தளாய் வரையான தனியார் பஸ் சேவையில் ஈடுபடும், திருகோணமலை 5ம் கட்டை பகுதியை சேர்ந்த 41 வயதுடைய லலித் குமார என்ற நடத்துநரே இவ்வாறு உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

